சமீபத்திய நிகழ்வுகள் (2012 - 2013)

12-ஆம் ஆண்டு துவக்க விழா  -  26 Apr 2017

12-ஆம் ஆண்டு துவக்க விழா

குவைத் தமிழ் சங்கத்தின் 12-ஆம் ஆண்டு துவக்க விழா

குவைத் தமிழ் சங்கத்தின் 12-ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்வுகள் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி குவைத்தில் உள்ள பின்டாஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழகத்திலிருந்து திருமதி. முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் வந்திருந்தார்கள்.

தமிழ் தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கிய நிகழ்ச்சியில் குழந்தைகளின் நடனம் மற்றும் சர்வதேச புகழ் பெற்ற எகிப்தின் “தன்நூரா” நடனம் ஆகியவை பார்வையாளர்களை மகிழ்வித்தது. குழந்தைகளுக்கான மேஜிக் நிகழ்ச்சி தனி அரங்கில் நடை பெற்றது.

குவைத் தமிழ் சங்கத்தின் தலைவர் திரு. Dr. புகழேந்திரன் வரவேற்புரை நிகழ்த்த, செயலாளர் திரு. இராதாகிருஷ்ணன் 12-ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். குவைத் தமிழ் சங்கத்தின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் அதன் தலைவர் திரு. புகழேந்திரன் அவர்கள், உலக தமிழ் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் பெற்றமைக்காக நினைவு பரிசு வழங்கி கௌரவப்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியின் முத்தாய்பாய் சிறப்பு விருந்தினர் திருமதி. முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் “குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு” என்ற தலைப்பிலான சொற்பொழிவு அமைந்தது என்றால் மிகையல்ல.

குவைத் தமிழ் சங்கத்தின் துணைத்தலைவர் திரு. கணேஷ்குமார் நன்றியுரை ஆற்றினார்.