சமீபத்திய நிகழ்வுகள் (2012 - 2013)

நவராத்திரி விழா பற்றிய செய்திகள் தினமலர் நாளிதழில்...  -  6 Oct 2014

நவராத்திரி விழா பற்றிய செய்திகள் தினமலர் நாளிதழில்...

குவைத்: குவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நவராத்திரி விழா நிகழ்ச்சி, ஷாமியா அரங்கத்தில் நடைபெற்றது. சங்க செயற்குழு உறுப்பினர்கள் குத்துவிளக்கு ஏற்ற, சங்க தலைவர் ராமதாஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்திய தூதர் சுனில் ஜெயின் பங்கேற்றார்.

 

குவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நவராத்திரி விழா

திரைப்பட இயக்குனர், நடிகர் 'யார்' கண்ணன், சித்தர்கள் பற்றி உரை நிகழ்த்தினார். கலைமாமணி தேச மங்கையர்க்கரசி சிறப்புரையாற்றினார். திரைப்பட பின்னணிப்பாடகி அர்த்ரா மற்றும் கங்கேஸ்வரன் திரைப்பட பாடல்களைப் பாட, நிகழ்ச்சியை மஞ்சு மற்றும் விநோதனி தொகுத்து வழங்கினர். குழந்தைகள் மகிழ்வுற மேஜிக் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது. 

சங்க செயலாளர் புகழேந்திரன் நன்றி கூறினார். 

- தினமலர் வாசகர் யாதவமூர்த்தி