சமீபத்திய நிகழ்வுகள் (2012 - 2013)

குவைத் தமிழ்ச்சங்கம் பற்றிய செய்திகள் தினமலர் நாளிதழில்...  -  8 Jun 2014

குவைத் தமிழ்ச்சங்கம் பற்றிய செய்திகள் தினமலர் நாளிதழில்...

1. குவைத் தமிழ்ச் சங்க புதிய நிர்வாகக் குழு (2014-2015)

குவைத்: இந்திய தூதரகத்தின் முறையான அங்கீகாரம் பெற்று இயங்கும் குவைத் தமிழ்ச் சங்கம் , புதிய நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுவுக்கான (2014-2015) தேர்தல் ஏப்ரல் 23ம் நாள் நடைபெற்றது. கீழ்க்கண்ட உறுப்பினர்கள் புதிய நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்: 
எஸ்.இராமதாஸ், தலைவர் 
இலட்சுமி பிரியா அம்பலவாணன், உப தலைவர் 
க.புகழேந்திரன், பொதுச் செயலாளர் 
என்.இராதாகிருஷ்ணன், துணைச் செயலாளர் 
எஸ்.ஜெயமணி, பொருளாளர் 
ஆர்.கணேஷ்குமார், துணைப் பொருளாளர் 

செயற்குழு உறுப்பினர்கள்: 
ஜெ.யாதவமூர்த்தி 
பி.சாமி வெங்கட்
எம்.முகமது ஹனிப் 
கே.மதனகுமார் 
பா.திலகம் பாலகபண்டியன் 
எஸ்.வனஜா பாண்டியன் 
பி.சோபியா 
ஜே.கயல்விழி ஜெயக்குமார் 
எஸ்.மஞ்சுளா சம்பத் 
எஸ்.சுனிதா சுரேஷ் 

தலைவாழை விருந்துடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. புதிய நிர்வாகக் குழு, 2014 - 2015ம் ஆண்டின் முதல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை, இந்திய தூதரை சந்தித்து வழங்கியது.

http://www.dinamalar.com/nri/details.asp?id=8475&lang=ta


2. 2014 - 2015 ம் ஆண்டிற்கான முதல் நிகழ்ச்சி, "பாட்டும் பரதமும்"

குவைத்: குவைத் தமிழ்ச்சங்கம் சார்பில் 2014 - 2015 ம் ஆண்டிற்கான முதல் நிகழ்ச்சியாக "பாட்டும் பரதமும்" என்னும் நிகழ்ச்சி, சால்மியா இந்தியன் மாதிரிப் பள்ளியில், மே 30ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தலைவர் ராமதாஸ் அனைவரையும் வரவேற்று, சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார். நிகழ்ச்சிக்கு, தாயகத்தில் இருந்து, டிவி புகழ் அமுதவாணன் மற்றும் பாடகர் அரவிந்த் ஸ்ரீனிவாசன், பாடகி மதுமிதா வந்து சிறப்பித்தார்கள். பிரியா அம்பலவாணன் மற்றும் முஹமது ஹனிப் நிகழ்ச்சிகளை அருமையாக தொகுத்து வழங்கினார்கள். குழந்தைகளின் பரதமும், பாடகர்களின் பாடல்களும், அமுதவாணனின் மிமிக்கிரி நிகழ்ச்சியும் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டதென்றால் அது மிகையாகாது. செயலாளர் புகழேந்திரனின் நன்றியுரையைத் தொடர்ந்து, அறுசுவை இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. 

 

http://www.dinamalar.com/nri/details.asp?id=8483&lang=ta