பொங்கல் விழா 2019

பொங்கல் விழா 2019  -  18 Jan 2019

குவைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும், இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ...
 
நீஙகள் ஆவலுடன் எதிர்பார்த்த, நம் குவைத் தமிழ்ச் சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சி, லக்ஷ்மன் ஸ்ருதி இசைக் குழுவினரின் பிரம்மாண்டமான  "இசை மழை" வரும் 25/01/2019, மாலை 5 மணி முதல், அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளி, ஹவாலியில் நடைபெறும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். திரைத்துறை நடிகைகள், பாடகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.
 
தாயகத்திலிருந்து திரைப்பட நடிகை கஸ்தூரி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார். மேலும் திரைப்பட பின்னணி பாடகர் க்ரிஷ், NSK ரம்யா, வர்ஷா மற்றும் விஜய் டிவி புகழ் அசார் , டைகர் தங்கதுரை ஆகியோர் கலந்துகொண்டு உங்களை மகிழ்விக்க இருக்கிறார்கள்.
 
அனுமதிச் சீட்டுகளை, நமது சங்க செயற்குழு / நிர்வாகக்குழு உறுப்பினர்களை அணுகி பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம் .
 
அனைவரும் வருக ... ஆதரவு தருக...
நன்றி...