குவைத் தமிழ்ச் சங்கம் முப்பெரும் விழா – அனுமதிச் சீட்டு

குவைத் தமிழ்ச் சங்கம் முப்பெரும் விழா – அனுமதிச் சீட்டு  -  4 Jan 2018

குவைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கடந்த மின்னஞ்சலில் நாம் தெரியப்படுத்தியபடி நமது குவைத் தமிழ்ச் சங்கத்தின் மெகா நிகழ்வான முப்பெரும் விழா வருகின்ற ஜனவரி 26-ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி அளவில் அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளி அரங்கில் நடை பெற உள்ளது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.

தற்சமயம் விழாவிற்கான அனுமதிச் சீட்டு தயாராகி உள்ளது. நமது தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் கீழே கொடுக்கபட்டுள்ள நிர்வாகக் குழு / செயற்குழு உறுப்பினர்களை தொடர்பு கொண்டு தங்களுக்கான அனுமதிச் சீட்டை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்விழாவை கண்டுமகிழ விருந்தினர்களுக்கும் அனுமதி உண்டு. உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான நுழைவு கட்டணத்தை செலுத்தி நுழைவு சீட்டினை  நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

கடந்த விழாக்களில் தாங்கள் அளித்து வந்த ஒத்துழைப்பும் ஆதரவும்  போல் இவ்விழாவிற்கும் உங்கள் பேராதரவையும் ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.