முப்பெரும் விழா அறிவிப்பு

முப்பெரும் விழா அறிவிப்பு  -  24 Dec 2017

நமது தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

வருகின்ற புத்தாண்டு, பொங்கல் மற்றும் குடியரசு தின விழாக்களை முன்னிட்டு நமது குவைத் தமிழ்ச் சங்கத்தின் மெகா நிகழ்வு முப்பெரும் விழாவாக வருகின்ற ஜனவரி திங்கள் 26-ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி அளவில் அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரியப்படுத்துகிறோம்.

உதய ராகம் U.K. முரளி குழுவினர் மற்றும் பிரபல பின்னணி பாடகர்கள் வழங்கும் இன்னிசை மழை நிகழ்ச்சி வழக்கம் போல் தங்களது பேராதரவுடன் நடை பெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கான அறிவிப்பு பதாகை இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்விழா இனிதே நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொண்டிருக்கிறோம். நமது சங்க உறுப்பினர்கள் தங்களால் இயன்ற நிறுவன ஸ்பான்சர், விளம்பரம் மற்றும் தனி நபர் வாழ்த்துக்கள் பெற்றுத் தந்து விழா சிறக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஸ்பான்சர், விளம்பரம் மற்றும் வாழ்த்துக்கள் பற்றிய விவரங்களை நமது தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் அவர்களிடம் கீழ்க்கண்ட தொடர்பு எண்களில் தெரியப்படுத்தவும்.

பொதுச் செயலாளர் - நா. இராதாகிருஷ்ணன் - 66571336

தலைவர் - க. புகழேந்திரன் - 62226987