குழந்தைகள் தின விழா 24 நவம்பர் 2017 – நினைவூட்டல்

குழந்தைகள் தின விழா 24 நவம்பர் 2017 – நினைவூட்டல்  -  20 Nov 2017

குவைத் தமிழ்ச் சங்கம்

Kuwait Tamil Sangam

குழந்தைகள் தின விழா 24 நவம்பர் 2017 – நினைவூட்டல்

அனைவருக்கும் வணக்கம்!!!

நமது குவைத் தமிழ்ச் சங்கத்தின் குழந்தைகள் தின விழா வருகின்ற 24-ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அப்பாஸியாவில் உள்ள ஸ்மார்ட் இந்தியன் பள்ளி (SMART INDIAN SCHOOL, ABBASIYA) அரங்கில் நடை பெற இருக்கிறது.

இந்த விழாவிற்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்  முனைவர் க. பாஸ்கரன் அவர்கள் தலைமையேற்று குழைந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.

மீண்டும் நினைவு படுத்துகிறோம் இது முழுக்க முழுக்க நமது குவைத் தமிழ்ச் சங்கத்தின் குழந்தைகளுக்கான நிகழ்வு. நமது குழந்தைகள் அனைவரும் தமது திறமைகளின் மூலம் நம்மை மகிழ்விக்க தயாராகி வருகிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தைகளை ஊக்கப்படுத்துமாறு நமது குழந்தைகளின் சார்பாக உங்கள் அனைவரையும் வருக என அழைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

குறிப்பு:

  • நிகழ்ச்சிக்கு தேவையான ஆடியோ பாடல் மற்றும் டப்ஸ்மாஸ் (DUBSMASH) வீடியோ அனைத்தும் தங்களது பகுதி ஒருங்கிணைப்பாளர்களிடம் வருகின்ற செவ்வாய் கிழமைக்குள் (21/11/2017) தவறாது சமர்ப்பிக்கவும்.
  • நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் மாலை தேநீர் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள், 10-ஆம் வகுப்பு மற்றும்   12- ஆம் வகுப்பில் கடந்த ஆண்டு சாதனை படைத்தவர்கள் மற்றும் பங்கு பெறும் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
  • ஓவியம், கைவினை ஆற்றல், அறிவியல் சோதனை போன்ற கண்காட்சி பொருட்களை நிகழ்ச்சி அன்று காலையில் நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் ஒப்படைக்க வேண்டுகிறோம்.