குழந்தைகள் தின விழா

குழந்தைகள் தின விழா  -  27 Oct 2017

அனைவருக்கும் வணக்கம் !!!                                                    

குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிப்பதில் குவைத் தமிழ்ச் சங்கம் எப்பொழுதும் தவறியதில்லை! இதோ இந்த வருடம் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் “குழந்தைகள் தின விழா” வருகின்ற நவம்பர் மாதம் 24-ஆம் நாள் அப்பாஸியாவில் உள்ள ஸ்மார்ட் இந்தியன் பள்ளி (SMART INDIAN SCHOOL – ABBASIYA) அரங்கில் நடை பெற உள்ளது என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த மின்னஞ்சலில் அறிவித்தது போலே இது முழு நாள் நிகழ்வாக காலை 9:00 மணி முதல் மாலை 5:00 வரை நடை பெற இருக்கிறது என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம். இந்நிகழ்வில் நமது சங்க உறுப்பினர்களின் குழந்தைகளின் தனித் திறமைகளை மேடையேற்ற பல்வேறு வகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் விவரங்கள் கீழ்க்கண்ட அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகள்:

வ. எண்

நிகழ்ச்சி / போட்டி

தகுதி

நேரம்

1

மாறுவேடம்

Pre KG முதல் 1-ஆம் வகுப்பு வரை

2 நிமிடங்கள்

2

ஆடை அலங்காரம்

6-ஆம் வகுப்பிற்கு மேல்

2 நிமிடங்கள்

3

வில்லு பாட்டு

குழுவினர் மட்டும்

3 நிமிடங்கள்

4

பட்டி மன்றம்

8-ஆம் வகுப்பிற்கு மேல்

2 குழு (4+4)  

தலைப்பு: குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு காரணம் – பெற்றோர்களே! / ஆசிரியர்களே!

15 நிமிடங்கள்

5

இசை கருவி மீட்டுதல்

குழு

5 நிமிடங்கள்

6

பாட்டு

குழு

4 நிமிடங்கள்

7

நாடகம்

குழு

5 நிமிடங்கள்

8

வினாடி வினா

குழு

15 நிமிடங்கள்

9

பலகுரல் /  நகைச்சுவை

குழு

5 நிமிடங்கள்

10

திருக்குறள் ஒப்புவித்தல்

தனி நபர் - 5-ஆம் வகுப்பு வரை

5 குறள்

11

திருக்குறள் ஒப்புவித்தல் – பொருளுடன்

தனி நபர் – 6-ஆம் வகுப்பு முதல்

5 குறள்

12

கவிதை

தனி நபர்  -  5-ஆம் வகுப்பு முதல்

2 நிமிடங்கள்

13

பேச்சு

தனி நபர் - 5-ஆம் வகுப்பு முதல்

2 நிமிடங்கள்

14

நாட்டிய நாடகம்

குழு

5 நிமிடங்கள்

15

நடனம்

குழு

5 நிமிடங்கள்

 

திறன் மற்றும் ஆற்றல் வெளிப்படுத்துதல்:

1

டப்ஸ்மாஸ் வீடியோ (Dubsmash)

ஒரு நிமிடத்திற்கு மிகாமல் வீடியோ பதிவு

2

ஓவியம்

கண்காட்சி

3

கைவினை ஆற்றல்

கண்காட்சி

4

அறிவியல் சோதனை

கண்காட்சி

 

விதி முறைகள்

  1. எல்லாக் குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டிய கட்டாயம் மற்றும் நிகழ்ச்சியின் காலம் கருதி ஒரு குழந்தை ஒரு நிகழ்ச்சியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
  2. குழந்தையின் முழுப் பெயர், தகப்பனார் பெயர், வயது, படிக்கும் வகுப்பு போன்ற விவரங்களை ஒருங்கினைப்பாளருக்கு Mobile / WhatsApp / SMS மூலம் தெரியப்படுத்தவும்.
  3. குழு நிகழ்ச்சிகளுக்கு குறைந்தது 4 முதல் அதிக பட்சம் 8 நபர்கள் வரை கலந்து கொள்ளலாம்.
  4. நடனத்தின் பாடல்கள், இசை, மாறுவேடம், நாடகத்தின் கரு, பாட விரும்பும் பாடல்கள், பட்டிமன்றத்தின் வசனங்கள் ஆகியவற்றை ஒருங்கினைப்பாளர்களிடம் தெரிவித்து அனுமதி பெற்ற பின்னரே பயிற்சி  (Practice) மேற்கொள்ளவும்.
  5. திறன் மற்றும் ஆற்றல் வெளிப்படுத்துதல் நிகழ்ச்சி – அனுமதி பெற்ற குழந்தைகளின் திறமைகள் நிகழ்ச்சி அரங்கில் கண்காட்சி படுத்தப்படும்.
  6. 2017-18 ஆம் வருட சந்தா கட்டணம் செலுத்தியவர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு உண்டு.
  7. முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு வழங்கப்படும்.
  8. பதிவு செய்ய கடைசி நாள் : 25-10-2017

பதிவு செய்வதற்கும், மேலதிக விவரங்களுக்கும் நமது குவைத் தமிழ்ச் சங்கத்தின் மகளிர் நிர்வாகக் குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் இவ்விழாவில் கடந்த 2016-2017 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பிக்க இருக்கிறோம். ஆகையால் 2016-2017 ஆம் ஆண்டில் 10 மற்றும் 12 வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற தங்கள் குழந்தைகளின் விவரங்களையும் ஒருங்கிணைப்பாளர்களிடம் தெரியப்படுத்தவும்.

குழந்தைகளின் பெயர்களை கீழ்க்கண்ட தங்கள் பகுதி ஒருங்கிணைப்பாளர்களிடம் உடனடியாக பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

ஒருங்கிணைப்பாளர்

தொலைபேசி

பகுதி

திருமதி. அருள்செல்வி ராஜ்குமார்

66581533

அபுஹளிஃபா (Abuhalifa)

திருமதி. சரவணாதேவி ஆவுடைநாயகம்

66738284

அபுஹளிஃபா (Abuhalifa)

திருமதி. கயல்விழி ஜெயக்குமார்

99779553

சால்மியா / அப்பாஸியா (Salmiya / Abbasiya)

திருமதி. சுதா ஜெயமணி

66556371

சால்மியா / அப்பாஸியா (Salmiya / Abbasiya)

திருமதி. விஜயப்ரியா ரமணன்

65512196

மங்காஃப் / ஃபாஹில் (Mangaf / Fahaheel)