"மகளிர் தின விழா"

"மகளிர் தின விழா"  -  2 Apr 2017

நமது குவைத் தமிழ்ச்சங்கத்தின் “மகளிர் தின விழா” வரும் 07.04.2017 தேதி வெள்ளிக் கிழமை காலையும், மாலையும் நமது சங்க மகளிர் பங்குபெறும் பல சுவையான போட்டிகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. காலை நிகழ்ச்சிகள் விபரம்:----காலை 9. 00 மணிமுதல் பிற்பகல் 1. 00 மணி வரை காலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் : பின்ட்டாஸ் திருமண அரங்கம் (Fintas Marriage Hall, Fintas) நிகழ்ச்சி தொகுப்பாளர்: விஜய் டிவி புகழ் திரு .ரக்ஸன் சிறப்பு விருந்தினர் : திருமதி. மல்லிகா பத்ரிநாத் 1.கோலப்போட்டி - காலை 9.30 மணி, தலைப்பு : "இயற்கை" 2.கூந்தல் அலங்காரம் - காலை 10.00 மணி 3.நேரடி சமையல் போட்டி - காலை 9.00 மணி (குறிப்பு: சமையலுக்கு தேவையான உபகரணங்கள் கேஸ் சிலிண்டர், அடுப்பு, பாத்திரங்கள் மற்றும் மிக்ஸி போன்றவற்றை போட்டியாளர்கள் கொண்டு வரவேண்டும். சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறி மற்றும் மசாலாவகைகள் குவைத் தமிழ்ச்சங்கத்தால் வழங்கப்படும்) சிறந்த படைப்புகளுக்கு தாயகத்திலிருந்து வருகை புரியும் சிறப்பு விருந்தினர் திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துகொள்கிறோம். மாலை நிகழ்ச்சிகள் விபரம்: --மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை மாலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் : சால்மியா இந்தியன் மாடல் பள்ளி அரங்கம் (SIMS-SALMIYA) நிகழ்ச்சி தொகுப்பாளர்: விஜய் டிவி புகழ் – தொகுப்பாளினி திருமதி .ரம்யா சிறப்பு விருந்தினரின் சொற்பொழிவோடு நமது சங்க மகளிர் உறுப்பினர்கள் பங்குபெறும் நடனம், பாடல், இசைக்கருவி வாசித்தல், பட்டிமன்றம் மற்றும் அலங்கார அணிவகுப்பு போன்ற பல்வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கடந்த விழாக்களில் தாங்கள் அளித்து வந்த ஒத்துழைப்பும் ஆதரவும் போல் இவ்விழாவிற்கும் உங்கள் பேராதரவையும் ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.