"முத்துச்சரம்" நாடக விழா

"முத்துச்சரம்" நாடக விழா  -  12 Sep 2016

அனைவருக்கும் வணக்கம்,

                       இவ்வருடத்தின்  இரண்டாம் நிகழ்ச்சி  23.09.2016 தேதி வெள்ளிக் கிழமை மாலை 5.30 மணியளவில் சால்மியா இந்தியன் மாடல் பள்ளியில் "முத்துச்சரம்" எனும் இனிய நாடக விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவின் சிறப்பு அம்சமாக  நமது சங்கத்தின் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்டு, உறுப்பினர்கள் மட்டுமே பங்குபெறும் வாழ்வியல் சிந்தனையுள்ள குறு நாடகங்கள் பல அரங்கேற உள்ளன.

இவ்விழாவின்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பிக்க தமிழகத்தில் இருந்து சிறந்த பேச்சாளர், பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் திரு. கரு பழனியப்பன் அவர்களும்  நாடக இயக்குனர் மற்றும் நடிகர் 'தொலைக்காட்சி புகழ்' டி.வி.வரதராஜன் அவர்களும் வருகை தர உள்ளனர்.

இவ்விழாவில் நிகழ்பெறவுள்ள நாடகங்களில் சிறந்த நாடகங்கள், நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் சிறந்த கதை ஆகியவற்றை சிறப்பு விருந்தினர்களால் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துகொள்கிறோம்.

 

கடந்த விழாக்களில் தாங்கள் அளித்து வந்த ஒத்துழைப்பும் ஆதரவும்  போல் இவ்விழாவிற்கும் உங்கள் பேராதரவையும் ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.


நிகழ்ச்சி சரியாக மாலை 5:30 மணிக்கு ஆரம்பிக்க இருப்பதால் உறுப்பினர்கள் மாலை 5 மணி முதல் தங்கள் வருகையை பதிவு செய்து உணவு சீட்டு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  

 

      வரவேற்பு பானமாக நமது பாரம்பரிய சிறப்புபானம் வழங்கப்பட உள்ளது.

 

குறிப்பு : இந்நிகழ்ச்சி KTS உறுப்பினர்களுக்கு மட்டுமே