குவைத் தமிழ்ச் சங்கம் 2015 - 2016

குவைத் தமிழ்ச் சங்கம் 2015 - 2016  -  24 Apr 2015

~குவைத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.
 
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
 பகவன்  முதற்றே உலகு'
 
என்ற திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்துடன் (2015-2016)  10 ஆம் ஆண்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள  நிர்வாகக்குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.  கடந்த ஆண்டுகளில் அளித்து வந்தஆதரவைப்போல் இவ்வருடமும் சங்கத்தின் அனைத்து விழாக்களுக்கும்  உங்கள் பேராதரவும் ஒத்துழைப்பும்நல்குமாறு அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.
 
இவ்வருடத்திற்கான துவக்க விழா வருகின்ற மே மாதம் 15 ஆம் தேதி மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதனை தெரிவித்துக்கொண்டு அந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அனைவரையும்சந்திப்பதற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும்  நன்றியை உரிதாக்க கடமைப்பட்டுள்ளோம்.
 
எங்களுடைய தொடர்பு எண்கள், மின்அஞ்சல் விலாசம் ஆகியவைகளை தந்துள்ளோம் பதிவு இறக்கம் செய்து பார்க்கவும்.
நன்றி
 
அன்புடன்.

சு. செல்லத்துரை                              க. ராஜா
  தலைவர்                                    பொதுச்செயலாளர்