லஷ்மன் ஸ்ருதி - மெகா இசை நிகழ்ச்சி

லஷ்மன் ஸ்ருதி - மெகா இசை நிகழ்ச்சி  -  6 Dec 2014

சங்க உறுப்பினர்களுக்கு, வணக்கம்.
 
நமது அடுத்த மெகா இசை நிகழ்ச்சி, ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவாக, 2015ம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ம் தேதி மாலை 5.30 க்கு, அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல், ஹவல்லி (American International School, Hawally)-யில்  நடைபெற உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தாயகத்தில் இருந்து,  லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு நிகழ்ச்சியை சிறப்பிக்க இருக்கிறார்கள். திரைப்பட பின்னணிப்பாடகி திருமதி. மாலதி மற்றும் பிரபல பாடகர்கள் நம்மை மகிழ்விக்க உள்ளார்கள். "அசத்த போவது யாரு " புகழ் வடிவேல் கணேஷ் மற்றும் பலர் நிகழ்ச்சிக்கு வருகை தரவிருக்கிறார்கள். அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.
 
நிகழ்ச்சிக்கு தாங்களும், தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுகிறோம். அனுமதிச்சீட்டு விற்பனை இன்னும் சில தினங்களில் துவங்கவிருக்கிறது. 6 வயதிற்குட்பட்ட குழ்ந்தைகளுக்கு அனுமதி இலவசம். தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு,  விலை. 2
குவைத் தினார் (KD.2) மட்டும், நண்பர்கள் மற்றும் விருந்தினர் அனுமதிச்சீட்டு  விலை 5 குவைத் தினார் (KD.5). தேவையான அனுமதிச்சீட்டுகளை, நம் சங்க செயற்குழு உறுப்பினர்களிடம் இருந்து முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம். இரவு உணவு அனைவருக்கும் வழங்கப்படும்.
 
அனுமதிச்சீட்டு விற்பனை பொறுப்பாளர்கள் :
 
அபுகலிபா / மங்காப் / பாஹீல் 
 
திரு. புகழ் - 9979 5136
திரு. ராதா கிருஷ்ணன் - 6657 1336
திரு. கணேஷ் குமார் - 9661 6609
திருமதி. மஞ்சுளா சம்பத் - 9751 8834
 
சால்மியா / குவைத் சிட்டி / மற்ற நகரங்கள்
 
திரு. ஜெயமணி - 9720 1373
திரு. யாதவமூர்த்தி - 6761 0015
திருமதி. பிரியா அம்பலவாணன் - 9929 4374
திருமதி. திலகம் பாலக பாண்டியன் - 5521 0504
திருமதி. கயல்விழி ஜெயக்குமார் - 9977 9553
 
அபாசியா / பர்வானியா
 
திரு. சாமி வெங்கட்  - 5573 0505
 
நன்றி.