நவராத்திரி விழா அழைப்பிதழ்

நவராத்திரி விழா அழைப்பிதழ்  -  10 Sep 2014

குவைத் தமிழ்ச் சங்க நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

 

குவைத் தமிழ்ச் சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சி "நவராத்திரி விழா" வரும் செப்டம்பர் மாதம், 19 ம் நாள் - வெள்ளிகிழமை, மாலை சரியாக 5:00 மணிக்கு, ஷாமியா அரங்கத்தில் (opp. Shamiya Jamiya, near Sheraton Roundabout, Kuwait City) நடைபெற இருக்கிறது.

 

தமிழ் திரைப்பட இயக்குனர், நடிகர் திரு. "யார்" கண்ணன் அவர்கள், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

 

சன் டிவி புகழ், கிருபானந்த வாரியார் அவர்களின் சிஷ்யை, திருமதி. தேச மங்கையர்க்கரசி சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.

 

திரைப்பட பின்னணிப்பாடகி செல்வி. அர்தராவின் மெல்லிசை பாடல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. நிகழ்சிகளை செல்வி. வினோதினி தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.

 

நம் குவைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுகிறோம். விருந்தினர் அனுமதி சீட்டு 3 குவைத் தினார் (KD. 3 per ticket). (தாய், தந்தையர் மட்டும் அனுமதிக்கபடுவார்கள்)

 

மாலை 4.30 மணிக்கு தேனீர் வழங்கப்படும். இரவு அறுசுவை உணவும் உண்டு. தங்களுடைய அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகைப்படம் கொடுக்காத நண்பர்கள், இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

 

இத்துடன் அழைப்பிதழ் மற்றும் வழித்தடம் இணைக்கப்பட்டுள்ளது.

 


தங்கள் வரவை அன்புடன் எதிர்நோக்கும்,

 

அன்புடன்.

 

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்:

 

எஸ் .இராமதாஸ்,  தலைவர்
இலட்சுமி பிரியா அம்பலவாணன், உப தலைவர்
க.புகழேந்திரன், பொதுச் செயலாளர்
என்.இராதாகிருஷ்ணன், துணைச் செயலாளர்
எஸ்.ஜெயமணி, பொருளாளர்
ஆர்.கணேஷ்குமார், துணைப் பொருளாளர்

 

செயற்குழு உறுப்பினர்கள்:

 

ஜெ.யாதவமூர்த்தி
பி .சாமி வெங்கட்
எம்.முகமது ஹனிப்
கே.மதனகுமார்
பா.திலகம் பாலகபாண்டியன்
எஸ்.வனஜா பாண்டியன்
பி.சோபியா பிரேம்குமார்
ஜே.கயல்விழி ஜெயக்குமார்
எஸ்.மஞ்சுளா சம்பத்
எஸ்.சுனிதா சுரேஷ்