சமீபத்திய அறிவிப்புகள் - (2016-2017)
“சித்திரைத் தென்றல்”   -  21 Apr 2017

இந்த ஆண்டின் நிறைவு விழாவாக வருகின்ற சித்திரை மாதம் (21.04.2017) 8ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணி முதல் “சித்திரைத் தென்றல்” எனும் இன்னிசை நிகழ்ச்சி பல சுவையான  நிகழ்ச்சிகளுடன்  மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

சன் டிவியின் நீங்கள் கேட்ட பாடல்” புகழ் திருவிஜயசாரதி நடத்தும் தம்பதியருக்கான போட்டிகளும் நடைபெறும்

சிறப்பு இசைவிருந்துவீணைஇசைவித்வான் "கலைமாமணிதிரு. இராஜேஷ்வைத்யா மற்றும் குழுவினர்கள்.  

 நூல் வெளியீடு : சங்க மகளிர் படைப்புக்கள் அடங்கிய   "உணவே மருந்து "   என்ற  சமையல் குறிப்பு புத்தகம் வெளியிடப்பட உள்ளது.  

"மகளிர் தின விழா"   -   7 Apr 2017

நமது குவைத் தமிழ்ச்சங்கத்தின் “மகளிர் தின விழா” வரும்  07.04.2017 தேதி வெள்ளிக் கிழமை காலையும், மாலையும் நமது சங்க மகளிர் பங்குபெறும் பல சுவையான போட்டிகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

 

காலை நிகழ்ச்சிகள் விபரம்:----காலை 9. 00 மணிமுதல் பிற்பகல் 1. 00 மணி வரை

 

காலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் : பின்ட்டாஸ் திருமண அரங்கம் (Fintas Marriage Hall, Fintas)

 

நிகழ்ச்சி தொகுப்பாளர்: விஜய் டிவி புகழ் திரு .ரக்ஸன்

 

சிறப்பு விருந்தினர் : திருமதி. மல்லிகா பத்ரிநாத்

 

1.கோலப்போட்டி -    2கூந்தல் அலங்காரம் -    3.நேரடி சமையல் போட்டி

 

 

  மாலை நிகழ்ச்சிகள் விபரம்:  --மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை

 

மாலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் : சால்மியா இந்தியன் மாடல் பள்ளி அரங்கம் (SIMS-SALMIYA)

 

நிகழ்ச்சி தொகுப்பாளர்: விஜய் டிவி புகழ் தொகுப்பாளினி  திருமதி .ரம்யா

 

சிறப்பு விருந்தினரின் புலவர்  இராமலிங்கம் சொற்பொழிவோடு நமது சங்க மகளிர் உறுப்பினர்கள் பங்குபெறும் நடனம்,பட்டிமன்றம் மற்றும் அலங்கார அணிவகுப்பு போன்ற பல்வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

 சிறப்பு விருந்தினராக திரைப்படநடிகை  கௌதமி கலந்து கொள்கிறார்.

Pongal Vizha-artists arrived   -  20 Jan 2017
Pongal Vizha-artists arrived

"குழந்தைகள் தின விழா"   -  18 Nov 2016

வரும்  நவம்பர் மாதம் 18 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு "குழந்தைகள் தின விழாசால்மியா இந்தியன் கம்யூனிட்டி பள்ளி (ICSK-Senior, Salmiya) அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது  என்பதை  மீண்டும்  தெரிவித்து கொள்கிறோம்.

இரண்டாம் நிகழ்ச்சி : "முத்துச்சரம்" நாடக விழா   -  23 Sep 2016
இரண்டாம் நிகழ்ச்சி :

                       இவ்வருடத்தின்  இரண்டாம் நிகழ்ச்சி  23.09.2016 தேதி வெள்ளிக் கிழமை மாலை 5.30 மணியளவில் சால்மியா இந்தியன் மாடல் பள்ளியில் "முத்துச்சரம்" எனும் இனிய நாடக விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது

Inaugural Function “ கோடையில் ஒரு வசந்தம்”   -  20 May 2016
Inaugural Function “ கோடையில் ஒரு வசந்தம்”

பதினோராம் ஆண்டு தொடக்க விழாவாக மே மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாலை 5 மணியளவில் (20.05.2016) "கோடையில் ஒரு வசந்தம்" எனும் பல்சுவை திருவிழா நடைபெற உள்ளது