சமீபத்திய அறிவிப்புகள் - (2014-2015)
லஷ்மன் ஸ்ருதி இசை நிகழ்ச்சி   -   1 Jan 2015
லஷ்மன் ஸ்ருதி இசை நிகழ்ச்சி

நமது அடுத்த மெகா இசை நிகழ்ச்சி, ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவாக, 2015ம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ம் தேதி மாலை 5.30 க்கு, அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல், ஹவல்லி (American International School, Hawally)-யில்  நடைபெற உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தாயகத்தில் இருந்து,  லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு நிகழ்ச்சியை சிறப்பிக்க இருக்கிறார்கள். திரைப்பட பின்னணிப்பாடகி திருமதி. மாலதி மற்றும் பிரபல பாடகர்கள் நம்மை மகிழ்விக்க உள்ளார்கள். "அசத்த போவது யாரு " புகழ் வடிவேல் கணேஷ் மற்றும் பலர் நிகழ்ச்சிக்கு வருகை தரவிருக்கிறார்கள்.

லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு பற்றி மேலும் விபரங்கள் அறிய, கீழே உள்ள இணையத்தில் சொடுக்கவும்.

http://www.lakshmansruthi.com/orchestra/index.asp

நவராத்திரி விழா 2014 - YouTube - ல்   -   3 Nov 2014

நவராத்திரி விழா நிகழ்ச்சி YouTube - ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை கண்டுகளிக்க கீழே சொடுக்கவும்.

பகுதி 01

பகுதி 02

 

நவராத்திரி விழா பற்றிய செய்திகள் தினமலர் நாளிதழில்...   -   6 Oct 2014
நவராத்திரி விழா பற்றிய செய்திகள் தினமலர் நாளிதழில்...

குவைத்: குவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நவராத்திரி விழா நிகழ்ச்சி, ஷாமியா அரங்கத்தில் நடைபெற்றது. சங்க செயற்குழு உறுப்பினர்கள் குத்துவிளக்கு ஏற்ற, சங்க தலைவர் ராமதாஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்திய தூதர் சுனில் ஜெயின் பங்கேற்றார்.

 

குவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நவராத்திரி விழா

திரைப்பட இயக்குனர், நடிகர் 'யார்' கண்ணன், சித்தர்கள் பற்றி உரை நிகழ்த்தினார். கலைமாமணி தேச மங்கையர்க்கரசி சிறப்புரையாற்றினார். திரைப்பட பின்னணிப்பாடகி அர்த்ரா மற்றும் கங்கேஸ்வரன் திரைப்பட பாடல்களைப் பாட, நிகழ்ச்சியை மஞ்சு மற்றும் விநோதனி தொகுத்து வழங்கினர். குழந்தைகள் மகிழ்வுற மேஜிக் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது. 

சங்க செயலாளர் புகழேந்திரன் நன்றி கூறினார். 

- தினமலர் வாசகர் யாதவமூர்த்தி

நவராத்திரி விழா அழைப்பிதழ்   -  11 Sep 2014
நவராத்திரி விழா அழைப்பிதழ்

நவராத்திரி விழா அழைப்பிதழ்

 

 

குவைத் தமிழ்ச்சங்கம் பற்றிய செய்திகள் தினமலர் நாளிதழில்...   -   8 Jun 2014

குவைத் தமிழ்ச்சங்கம் பற்றிய செய்திகள் தினமலர் நாளிதழில்...

1. குவைத் தமிழ்ச் சங்க புதிய நிர்வாகக் குழு (2014-2015)

குவைத்: இந்திய தூதரகத்தின் முறையான அங்கீகாரம் பெற்று இயங்கும் குவைத் தமிழ்ச் சங்கம் , புதிய நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுவுக்கான (2014-2015) தேர்தல் ஏப்ரல் 23ம் நாள் நடைபெற்றது. கீழ்க்கண்ட உறுப்பினர்கள் புதிய நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்: 
எஸ்.இராமதாஸ், தலைவர் 
இலட்சுமி பிரியா அம்பலவாணன், உப தலைவர் 
க.புகழேந்திரன், பொதுச் செயலாளர் 
என்.இராதாகிருஷ்ணன், துணைச் செயலாளர் 
எஸ்.ஜெயமணி, பொருளாளர் 
ஆர்.கணேஷ்குமார், துணைப் பொருளாளர் 

செயற்குழு உறுப்பினர்கள்: 
ஜெ.யாதவமூர்த்தி 
பி.சாமி வெங்கட்
எம்.முகமது ஹனிப் 
கே.மதனகுமார் 
பா.திலகம் பாலகபண்டியன் 
எஸ்.வனஜா பாண்டியன் 
பி.சோபியா 
ஜே.கயல்விழி ஜெயக்குமார் 
எஸ்.மஞ்சுளா சம்பத் 
எஸ்.சுனிதா சுரேஷ் 

தலைவாழை விருந்துடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. புதிய நிர்வாகக் குழு, 2014 - 2015ம் ஆண்டின் முதல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை, இந்திய தூதரை சந்தித்து வழங்கியது.

http://www.dinamalar.com/nri/details.asp?id=8475&lang=ta


2. 2014 - 2015 ம் ஆண்டிற்கான முதல் நிகழ்ச்சி, "பாட்டும் பரதமும்"

குவைத்: குவைத் தமிழ்ச்சங்கம் சார்பில் 2014 - 2015 ம் ஆண்டிற்கான முதல் நிகழ்ச்சியாக "பாட்டும் பரதமும்" என்னும் நிகழ்ச்சி, சால்மியா இந்தியன் மாதிரிப் பள்ளியில், மே 30ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தலைவர் ராமதாஸ் அனைவரையும் வரவேற்று, சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார். நிகழ்ச்சிக்கு, தாயகத்தில் இருந்து, டிவி புகழ் அமுதவாணன் மற்றும் பாடகர் அரவிந்த் ஸ்ரீனிவாசன், பாடகி மதுமிதா வந்து சிறப்பித்தார்கள். பிரியா அம்பலவாணன் மற்றும் முஹமது ஹனிப் நிகழ்ச்சிகளை அருமையாக தொகுத்து வழங்கினார்கள். குழந்தைகளின் பரதமும், பாடகர்களின் பாடல்களும், அமுதவாணனின் மிமிக்கிரி நிகழ்ச்சியும் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டதென்றால் அது மிகையாகாது. செயலாளர் புகழேந்திரனின் நன்றியுரையைத் தொடர்ந்து, அறுசுவை இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. 

 

http://www.dinamalar.com/nri/details.asp?id=8483&lang=ta 

பாட்டும் பரதமும்   -  30 May 2014
பாட்டும் பரதமும்

Meeting with Indian ambassador   -  29 May 2014
Meeting with Indian ambassador

Meeting with Indian ambassador