|
தமிழை வளர்க்க தமிழரிடம் தமிழில் பேசுங்கள்.
மகளிர் தின விழா - 20/04/2012 குவைத் தமிழ்ச் சங்கம் வருகின்ற ஏப்ரல் மாதம் இருபதாம் தேதியை ( 20-04-2012 ) மகளிர் தின விழாவாகக் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறது. நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும், மறுபடியும் இந்தப் பக்கத்திற்கு வந்து அறிந்து கொள்ளுங்கள்.
குவைத் தமிழ்ச் சங்கம் பற்றி...
குவைத் தமிழ் சங்கம், குவைத் வாழ் தமிழர்களுக்கான ஒரு சமூகக் குழுமமாக, 02-10-2005 அன்று ஒருமித்த கருத்துக் கொண்ட தமிழ் மக்களால் துவங்கப்பட்ட ஒரு சமூகக் கலாசார அமைப்பு குவைத் தமிழ் சங்கம் 01-12-2005 அன்று அதிகாரப்பூர்வமாக குவைத்திலுள்ள இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்ட (பதிவு எண். KUW/ISI/321/16/2005) அங்கீகாரம் பெற்றது. ஏறத்தாழ இருநூறு தமிழ்க் குடும்பங்களை அங்கத்தினர்களாகப் பெற்று, குவைத் வாழ் தமிழர்க்கும், அவர்தம் மக்களுக்கும் தமிழையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்கேற்றக் களமாக குவைத் தமிழ் சங்கம் விளங்குகிறது.
|