தமிழை வளர்க்க தமிழரிடம் தமிழில் பேசுங்கள்.

 

மகளிர் தின விழா - 20/04/2012

குவைத் தமிழ்ச் சங்கம் வருகின்ற ஏப்ரல் மாதம் இருபதாம் தேதியை ( 20-04-2012 ) மகளிர் தின விழாவாகக் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறது.

மகளிர் தின விழா 2012 காலை மற்றும் மாலை, இரு பிரிவு நிகழ்ச்சிகளாக நடைபெற உள்ளது . விவரங்கள் பின்வருமாறு ....
விழா நாள் - 20 .04 .2012 - வெள்ளிக்கிழமை
இடம் : ICSK பெண்கள் பள்ளி - சால்மியா ( Indian Cummunity School - Sr Girls - Salmiya)

காலை நிகழ்ச்சி -
"மகளிர் உலகம்" - மகளிருக்காக மகளிர் நடத்தும் ஒரு கருத்தரங்கம் . ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
காலை 9.30 மணிக்கு - தேனீர்
காலை 9.45 மணிக்கு - கருத்தரங்கம் - 1
"மகளிர் உடல் நலன் மேலாண்மை" - டாக்டர் கமலா செல்வராஜ்
( மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் புதல்வி மற்றும் தலைச்சிறந்த மகளிர்- குழந்தைகள் நல மருத்துவர் )

காலை 11.15 மணிக்கு - கருத்தரங்கம் -2
"மனம் மற்றும் குண நலன் மேலாண்மை" - கவிஞர் விசாலி மனோகரன் ( கவியரசு கண்ணதாசன் புதல்வி )
மதியம் 12.30 மணிக்கு நிறைவு . மற்றும் மதிய உணவு


மாலை நிகழ்ச்சி - ( சங்க உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்)
மாலை 5.15 - 5.45 மணி - தேனீர்
மாலை மணி 5.45 - நிகழ்ச்சி துவக்கம்
1."கலை மாலை " நம்சங்க மகளிர் பங்குபெறும் பல்சுவை கலை நிகழ்ச்சி ,
2.கவிஞர் விசாலி நடத்தும் " வானமே எல்லை - பெண்கள் முன்னேற்றம் காண்பது மகள் நிலையிலா - மருமகள் நிலையிலா? ".,
3.திருமதி கமலா செல்வராஜின் சிறப்புரை.
இரவு மணி 8.45 - கலைநிகழ்சிகள் நிறைவு
இரவு மணி 8.45 - 9.00 - வருடாந்திர பொதுக்குழு கூட்டம் மற்றும் 2012-13 நிர்வாகக்குழு தேர்வு
இரவு மணி 9.00 - உணவு
மாலை நிகழ்ச்சி நம் சங்க அங்கத்தினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமே.

 

குவைத் தமிழ்ச் சங்கம் பற்றி...

 

        குவைத் தமிழ் சங்கம், குவைத் வாழ் தமிழர்களுக்கான ஒரு சமூகக் குழுமமாக, 02-10-2005 அன்று ஒருமித்த கருத்துக் கொண்ட தமிழ் மக்களால் துவங்கப்பட்ட ஒரு சமூகக் கலாசார அமைப்பு

        குவைத் தமிழ் சங்கம் 01-12-2005 அன்று அதிகாரப்பூர்வமாக குவைத்திலுள்ள இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்ட (பதிவு எண். KUW/ISI/321/16/2005) அங்கீகாரம் பெற்றது.

        ஏறத்தாழ இருநூறு தமிழ்க் குடும்பங்களை அங்கத்தினர்களாகப் பெற்று, குவைத் வாழ் தமிழர்க்கும், அவர்தம் மக்களுக்கும் தமிழையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்கேற்றக் களமாக குவைத் தமிழ் சங்கம் விளங்குகிறது.